முன்னாள் பிரதமர் மீது தாக்குதல் நடாத்த திட்டம்

முன்னாள் பிரதமைர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த மீது பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி பயணிக்கும் இடங்களிலும் நிரந்தரமாக தங்கியிருக்கும் இடங்களிலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, மகிந்த ராஜபக்ஷ மீது எப்பொழுது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதனால் உச்சபட்ச பாதுகாப்பை வழங்கவது உகந்தது என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையில் வீதித் தடைகளை அமைக்குமாறு மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு விடுத்த எழுத்துமூல கோரிக்கைக்கமைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.