சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இந்த வகையில் இன்று மாங்காய் வற்றல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள மாங்காய் – 20,
மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்,
பொடி உப்பு – 200 கிராம்.
செய்முறை:
மாங்காய்களைக் கழுவி துடைத்து நிழலில் காயவிடவும்.
இதை துண்டுகள் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நாள் குலுக்கிக் கொள்ளவும்.
மூன்றாம் நாள் உப்பு நீரை வடித்து, மாங்காயை பெரிய தட்டுகளில் போட்டு வெயிலில் காயவிடவும்.
பிறகு, மீண்டும் அதே உப்பு நீரில் போட்டு, நீரை வடித்து காயவிடவும்.
இப்படி ஒரு வாரம் காயவிட்டு தண்ணீர் முழுவதும் வற்றி மாங்காய் சுக்கு போல் ஆனதும், ஒரு எவர்சில்வர் டப்பா அல்லது பானையில் போட்டு வைக்கவும்.
இது சீக்கிரம் கெட்டுப்போகாது.