இந்த விஷம் எலும்புகள் மற்றும் தசைகளை ஒன்றாக இணைக்கும் பிணைப்பை உடைத்து, உடல் முற்றிலும் நடுக்கத்தை ஏற்படுத்தும்.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பல அயல்நாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறின. இருப்பினும் ரஷ்ய அதிபர் புதின் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளுக்கு பதிலடி தருவேன் என கூறி வருகிறார்.
மேற்கத்திய நாடுகள் ரஷியாவை எதிர்த்தாலும், அந்நாட்டிடம் இருந்துதான் எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இதனால் புதின் தைரியமாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது புதின் தன் எதிரிகளை கொல்வதற்கு உலகில் அதிகம் ஆபத்தான விஷம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஸ்ட்ரைக்னைன்’என்று பெயர்கொண்ட அந்த விஷம் ரஷிய உளவு நிறுவனமான கேஜிபியால் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த விஷம் குறித்து நச்சுயியல் நிபுணர் நீல் பிராட்பரி கூறியதாவது:-
‘ஸ்ட்ரைக்னைன்’ என்பது உலகின் மிகவும் ஆபத்தான வேதிப்பொருள். இந்த விஷம் உடலுக்குள் போனவுடன் பயங்கர வலியை கொடுக்கும். எலும்புகள் மற்றும் தசைகளை ஒன்றாக இணைக்கும் பிணைப்பை உடைத்து, உடல் முற்றிலும் நடுக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த விஷம் மிக மெதுவாக செயல்பட்டு பல மணி நேரத்திற்கு பிறகு மனிதர்களை கொல்லும். அவர் சாகும்வரை உடலில் உள்ள தசைகள் தொடர்ந்து வலியை உணர்ந்தபடியே இருக்கும்.