கோடைக்காலமாக இருந்தாலும் குளிர்காலமாக இருந்தாலும் கூந்தலில் ஈரப்பதம் இல்லாவிட்டால் அது பொடுகுக்கு வழிவகுக்கும்.
பெண்களை போன்று ஆண்கள் கூட பொடுகு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றார்கள். இதனை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காவிட்டால் அது அதிகமாகிவிடும்.
இதற்கு கடைகளில் என்னத்தான் ஷாம்பு போட்டு குளித்தாலும் இதனை நிரந்தரமாக நீக்க முடியாது. பொடுகு நீங்கியது என்று நினைக்கும் போதே மீண்டும் பொடுகு பிரச்சனை தலைதூக்கும்.
இதற்கு கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி உபயோகிப்பதை தவிர்த்துவிட்டு ஒரு சில இயற்கை முறைகளை கையாண்டால் போதும்.
ஒட்ஸ் கூந்தலுக்கு ஆரோக்கியமானது, கூடுதலாக இது கூந்தலின் வளர்ச்சியை கொடுக்கவும் கூந்தலை ஈரப்பதமாகவும் வைக்க செய்கிறது, முடி உதிர்தல் பிரச்சனையை இல்லாமல் செய்ய கூடியது, பொடுகை விரட்ட கூடியது.
தேவையானவை
ஓட்ஸ்- 1 கப்
வெந்நீர் -2 கப்
மஸ்லின் துணி
செய்முறை
வெந்நீர் அதிக சூட்டில் இருக்க வேண்டியதில்லை. வெந்நீரில் ஓட்ஸ் சேர்த்து 3 நிமிடங்கள் வைக்கவும். அவ்வபோது கலக்கி விடுங்கள். கலவை நன்றாக கலந்ததும் வெதுவெதுப்பாக ஆன பிறகு மிக்ஸியில் சேர்த்து குழைய மசித்துவிடுங்கள்.
இதை சிறிது சிறிதாக மஸ்லின் துணியில் சேர்த்து வடிகட்டுங்கள். நீர் வடிய சில நேரம் எடுக்கும். மொத்தமாக துணியில் போடாமல் சிறிது சிறிதாக சேர்த்து வடிகட்டி வையுங்கள்.