தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
கோவிலுக்கு சாமி தரிசனம்
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் அண்மையில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
நடிகை நயன்தாரா கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பபேஷ்வரர் ஆலயத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் முடிந்தவுடன் மங்களம் யானையிடம் வாழைப்பழம் கொடுத்து ஆசி பெற்றார்.
வைரலான பத்திரிக்கை
இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த பத்திரிக்கையில், அவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி நடக்க உள்ளதாகவும், மேலும், அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாகவும் அந்த பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
முதலில் இந்த ஜோடி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். இதற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இவர்கள் அனுமதி கோரியுள்ளனர்.
ஆனால் இந்த திருமணத்தில் இருவீட்டார் தரப்பிலிருந்தும் 150 பேருக்கு மேல் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டால், அதற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதி தர மறுத்திவிட்டனர் என்று கூறுப்படுகிறது.
நோ சொன்ன திருப்பதி
திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது திருமணம் நடைபெறும் இடத்தை மாற்றி இருக்கிறார்களாம்.
அதன்படி நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிட்டு உள்ளனர், இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் உள்ள நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து, சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.