மோதிக் கொள்ளப் போகும் இரு பிரபல ஹீரோக்கள்

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ‘விருமன்’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘எஸ்.கே.20’ திரைப்படம் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படமானது ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதே தினத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ திரைப்படம் விநாயகர் சதூர்த்திக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள். தற்போது கார்த்திக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.20’ வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.