ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, அந்த பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை உயர் நீதிமன்றம் இரத்துச் செய்தமையே இதற்காக காரணம் என கூறப்படுகிறது.
ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னிச்சையாக எடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு துறைகளில் இருக்கும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தற்போது கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக பேசப்படுகிறது.
பதவி விலக தயாராகும் மேலும் சிலர்
இவர்களின் சிரேஷ்ட ஆலோசகரான லலித் வீரதுங்க மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக லலித் வீரதுங்க உட்பட சிலர் மிக விரைவில் பதவிகளில் இருந்து விலகுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
லலித் வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளராக கடமையாற்றியதுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பின்னர், அவரது சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.