பெரும்பாலான மக்கள் காலை எழுந்தவுடன் சூடாக டீ, காபி குடிப்பதை விரும்புவார்கள். சிலரோ உடல் எடையை குறைக்க வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பார்கள்.
எனவே அதிகாலை எழுந்தவுடன் நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஒரு கப் வெந்நீர் பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
அதேப்போல் காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துபவர்களுக்கு, அதீத அசிடிட்டி, அல்சர், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனைகள் இருக்க கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
வெந்நீரின் பயன்கள்
மலக்குடலை சுத்தம் செய்யும் பணியை எளிமையாக்குகிறது.
உங்கள் பசி உணர்வு அதிகரிக்கும்.
வயிறு உப்புசம் மற்றும் கேஸ்ட்ரிக் தொடர்புடைய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
சருமம் தெளிவாக இருக்க உதவுகிறது
உடலில் பித்தம் அதிகமாக இருந்தால், வெந்நீரை ஆற வைத்து உங்கள் உடல் வெப்ப அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாதம் மிகுதியாக இருப்பவர்கள் சூடாகவும் இல்லாமல், குளுமையாகவும் இல்லாமல் வெதுவெதுப்பான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரைப் பருகுவதன் மூலம், உடலின் வெப்பநிலை அதிகரித்து, மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் வேகமாக கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
முக்கியமாக சுடுநீரை காலையில் பருகி வந்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது குறையும். மேலும் மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படாமலும் இருக்கும்.