தற்போது நாட்டில் வெறிநாய் கடிக்கான மருந்து இல்லை!

இலங்கையில் தற்போது வெறி நாய்க்கடி நோய்க்கு வழங்கப்படும் ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் அந்த நோய் ஏற்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவாக வீட்டுச் சூழலில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துமாறு பொது சுகாதார கால்நடை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.டி.கித்சிறி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெறி நாய்க்கடி நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 25 முதல் 30 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியும் எனவும் கித்சிறி தெரிவித்துள்ளார்.

வெறி நோய் ஏற்பட்டுள்ள விலங்குகள் மனிதர்களை கடித்தால், மனிதர்களுக்கு வெறி நோய் ஏற்படும்.

இருப்பினும், அதனை குணப்படுத்த தேவையான மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.