கமல்ஹாசன் நீண்ட வருடம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
எப்போது அடுத்த ரவுண்ட் வருவார் என ஒட்டு மொத்த திரையுலகமும் காத்திருந்தது. எல்லோரும் எதிர்ப்பார்த்தபடியே கமல் விக்ரம் படத்தில் செம்ம மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இரண்டு நாட்களில் 1.3 மில்லியன் டாலர் விக்ரம் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் பீஸ்ட் படத்தின் மொத்த அமெரிக்கா வசூலையும் விக்ரம் இரண்டே நாட்களில் முறியடித்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் தன் இடத்தை மீண்டும் பதிவு செய்துள்ளார், குறிப்பாக வசூல் வேட்டையில்.