இசையமைப்பாளர் அனிருத்
தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத்.
இவருடைய இசையில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இதை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம், அஜித்தின் Ak 62, ரஜினியின் தலைவர் 169 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அனிருத் திருமணம்
சமீபகாலாமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் இணையத்தில் வெளிவந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தியிடம், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி கேட்டப்பட்டுள்ளது.
சூர்யா, ரன்வீர் சிங், அல்லது அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டதற்கு, ” இந்த மூவரில் அனிருத்துக்கு மட்டும் தான், இதுவரை திருமணம் நடக்கவில்லை. அந்த காரணத்தினால் மட்டும், நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளிக்கிறேன் ” என கூறியுள்ளார்.