புதிய கெட்டப்பில் அசத்தும் அருள்நிதி

வம்சம் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான நடிகர் அருள்நிதி அதற்கு பிறகு மௌன குரு, டிமான்டி காலனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அருள்நிதி டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் என இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. அஜய் ஞானமுத்து அந்த படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் ராட்சசி பட புகழ் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி ஒரு படத்தில் நடிக்கிறார். அது பற்றிய அறிவிப்பு தற்போது வந்திருக்கிறது. அந்த படத்திற்காக அருள்நிதி பெரிய மீசை வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை ஹீரோயின் துஷாரா விஜயன் தான் அருள்நிதி ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார்.