புதிய காதலனை அறிமுகப்படுத்திய எமி ஜாக்சன்

எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர், இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன் அப்படத்தை தொடர்ந்து ஐ, தெறி, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக 2.0 திரைப்படத்தில் நடித்த அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது சொந்த நாடான இங்கிலாந்து-திற்கே சென்றுவிட்டார்.

மேலும் ஏற்கனவே எமி ஜாக்சனுக்கு இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் George Panayiotou என்பருடன் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது, அவர்களுக்கு Andreas என்ற மகனும் பிறந்தார்.

இதற்கிடையே தற்போது எமி ஜாக்சன் Ed Westwick என்பவரை காதலிப்பதாக அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இதனை அறிவித்துள்ளார் எமி ஜாக்சன்.