கர்ப்பிணி பெண்ணாக நடிக்கும் அனிகா

பல படங்களில் அஜித்தின் மகளாக நடித்து இருப்பவர் அனிகா. என்னை அறிந்தால், விஸ்வாசம், மிருதன் போன்ற படங்களில் நடித்து இருக்கும் அவர் தற்போது ஒரு படத்தில் மெயின் ரோலில் நடித்து இருக்கிறார்.

வாசுவின் கர்பிணிகள் என்ற படத்தில் அவர் 16 வயதிலேயே கர்ப்பமான பெண்ணாக நடித்து இருக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. அதில் நீயா நானா கோபி மற்றும் வனிதா, அனிகா உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

16 வயது முதல் 52 வயதிருக்கும் நான்கு பெண்கள் மற்றும் ஒரு டாக்டர் ஆகியோரை சுற்றி தான் இந்த படத்தின் கதை இருக்கும் என கூறி இருக்கின்றனர்.

வைரலாகும் போஸ்டர் இதோ