தன் திருமண திகதியை இயக்குநர் விக்னேஷ் சிவன் முதல்முறையாக உறுதி செய்திருக்கிறார்.
செய்தியாளர்களை இன்று சந்தித்த விக்னேஷ் சிவன் பேசுகையில் வரும் 9ம் தேதி நயன்தாராவை திருமணம் செய்கிறேன்.
மகாபலிபுரத்தில் திருமணம் நடக்கிறது. திருப்பதியில் திருமணம் செய்ய நினைத்தோம். ஆனால் சில காரணங்களால் அங்கு நடத்த முடியவில்லை
திருமணத்திற்கு பிறகு மீடியாவை சந்திப்போம்
திருமணம் முடிந்த பிறகு புகைப்படங்களை வெளியிடுவோம். ஜூன் 11ம் தேதி நானும், நயன்தாராவும் சேர்ந்து வந்து மீடியாவை சந்திக்கிறோம்.
இத்தனை நாட்கள் ஆதரவு அளித்தது போன்று இனி பர்சனலாகவும் உங்களின் ஆதரவும், வாழ்த்தும் தேவை என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கவிருக்கிறது.
இந்து முறைப்படி நடக்கும் திருமணத்தில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் விவிஐபி.,க்கள் என்றும் கூறப்படுகிறது.
ரஜினி, விஜய்,அஜித் ஆகியோருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.