நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சி உள்ளதால் ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் முதலில் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.
எனினும், அங்கு அனுமதி கிடைக்காததால் மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
இவர்களது திருமணத்தின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.
ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு
இவர்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளது.
இந்த திருமணத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தும் பொறுப்பு இயக்குனர் கவுதம் மேனன் ஏற்றுள்ளார்.
நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் கடற்கரையில் வைத்து திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், இவர்களது திருமணத்துக்காக கண்ணாடி மாளிகை போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர பல்வேறு சர்ப்ரைஸான விஷயங்களும் இவர்களது திருமணத்தில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.