உணவு பழக்க வழக்கங்களே நம்முடைய உடல் எடை அதிகரிப்புக்கு வழி வகை செய்கிறது.
அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது.
நாம் காலையில் செய்யும் உணவு தேர்வுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எடை குறைப்பு உணவுகளில் இட்லியும் ஒன்று. எப்படி எடை குறைப்புக்கு இட்லி உதவி செய்கின்றது என்று பார்க்கலாம்.
எடையை குறைக்கும் இட்லி
தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது.
இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது.
இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால், அதில் புரதங்களின் இருப்புத்தன்மை அதிகமாகும் மற்றும் வைட்டமின் பி சத்தின் அளவு மேம்பட்டு இருக்கும்.

முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இட்லி மிகவும் சிறப்பான காலை உணவு. அதிலும் இதனை சிட்ரஸ் அமிலம் நிறைந்த தக்காளி சட்னியுடன் சேர்த்து உட்கொண்டால், சிட்ரஸ் அமிலமானது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, அரிசியினால், கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்குவதைத் தடுக்கலாம்.
இட்லி மாவில் இவற்யையும் சேர்த்து செய்து சாப்பிடுங்க…!
ரவை இட்லி மாவு கலவை
ரவையில் இட்லி சமைக்கலாம். இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ரவை இட்லி மாவில் சமைக்கப்படும் இட்லியானது பஞ்சுபோல் மெத்து மெத்து என்று இருக்கும்.
கேழ்வரகு இட்லி மாவு கலவை
அாிசி மாவில் மட்டும் அல்லாமல், கேழ்வரகு மாவிலும் மக்கள் இட்லி சமைக்கின்றனர். கேழ்வரகு மாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. கேழ்வரகு இட்லி ஒரு மாறுபட்ட உணவாகும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்.
கேழ்வரகு இட்லியை தங்களது தினசாி காலை உணவில் சோ்த்துக் கொள்ளலாம். கேழ்வரகு இட்லி மாவில் நாா்ச்சத்து அதிகம் உள்ளது. அதோடு அதில் க்ளுட்டன் இருக்காது.
தினை இட்லி கலவை
தினை மாவுக் கலவையில் விதவிதமான தோசைகள் செய்து சாப்பிடலாம். ஏனெனில் தினையில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான மக்னீசியம், தாமிரம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன.
தினையில் குறைவான கலோாிகளே உள்ளதால், உடல் எடையைக் குறைப்பதற்கு தினை மாவில் இட்லி, தோசை செய்து சாப்பிடலாம்.