நடிகை சினேகாவின் அண்மைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.
நடிகை சினேகா தனது எடையை முன்பு இருந்ததை விட குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை சற்று கூடி காணப்பட்டது.
இந்த நிலையில் சினேகா வெகுவாக தன்னுடைய எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். அது மட்டும் இல்லை துளியும் மேக்கப் இல்லாமல் மிகவும் எளிமையாக உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அது மட்டும் இன்றி இவர் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.