ஜப்பானுடனான முக்கிய ஒப்பந்தத்தை நிறுத்தி கொண்ட ரஷ்யா

ஜப்பானிய கடற்தொழிலாளர்களை குரில் தீவுகளுக்கு அருகே கடற்தொழிலில் ஈடுபட அனுமதிக்கும் ஜப்பானுடனான ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒப்பந்தத்தின் கீழ் ஜப்பான் பணம் செலுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு இவ்வாறு அறிவித்துள்ளது.

ஒப்பந்தம் இடைநிறுத்தம்
ஜப்பான் தரப்பு அதன் அனைத்து நிதிக் கடமைகளையும் நிறைவேற்றும் வரை 1998 ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ஓகோட்ஸ்க் கடலையும் பசிபிக் பெருங்கடலையும் பிரிக்கும் குரில் தீவுக்கூட்டத்தை மொஸ்கோ தனக்கு சொந்தமானது என்று கருதுகிறது.

இந்நிலையில் டோக்கியோ நான்கு தீவுகளும் ஜப்பானுக்கு சொந்தமானது என்றும் போரின் இறுதி நாட்களில் சோவியத் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது என்றும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.