தொப்பை கொழுப்பை கரைக்க இஞ்சி உதவி புரியும்.
தொப்பையை குறைக்க இளைஞர்கள் இன்று பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.
உங்கள் உடல் இழப்பு பயணத்தில் இஞ்சி என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கொழுப்பைக் கரைக்கும் இஞ்சி
இஞ்சியை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் எடை இழப்புக்கு உதவும்.
இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொழுப்பைக் கரைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், மலச்சிக்கலை சரிசெய்யவும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் நன்றாக வேலை செய்கின்றன.
இஞ்சியில் பல்வேறு நன்மைகள் நிறைந்திருந்தாலும், கோடை காலத்தில் ஒருவர் 3-4 கிராமுக்கு மேல் இஞ்சியை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இது உடல் சூட்டை அதிகரிக்கும் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
இஞ்சி டீ தயாரிப்பது எப்படி?
இஞ்சி டீ 2 கப் தண்ணீர் எடுத்து 1 டீஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்க்கவும்.
தண்ணீரை கொதிக்கவைத்து, பானத்தை வடிகட்டி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
இதை நன்றாகக் கலந்து மதிய உணவிற்குப் பிறகு குடித்தால் எடை குறைவதுடன் வாயுத் தொல்லையும் குறையும்.