தற்போது நாட்டிற்கு எரிவாயுவை விநியோகிக்கும் ஓமான் நிறுவனத்தை விடவும் குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட தாய்லாந்து சியேம் நிறுவனம் 37.5 மில்லியன் டொலரை கோரியுள்ளது.
அந்த நிதியை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அந்த நிறுவனத்துடன் இன்னும் ஒப்பந்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிறுவனத்தை விட 9 மில்லியன் டொலருக்கும் குறைவான விலையில் எரிவாயுவை வழங்க தாய்லாந்து சியேம் நிறுவனம் விருப்பம் வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள கடந்த மே மாதம் 2 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றிருந்தது.
இதன்போது, தற்போது நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் உள்ள எரிவாயு ஓமானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கப்பலுக்கான கட்டணம் செலுத்தல் பெரும்பாலும் இன்று பிற்பகல் அளவில் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.