நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர்.
இந்நிலையில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து நேற்று திருமணம் செய்தது அனைவரும் அறிந்தே.
இவர்கள் திருமணத்தில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர், மேலும், தமிழகம் முழுவதும் பல குழந்தைகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்போது இந்த ஜோடி இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
ஏற்கனவே தங்கள் திருமணத்தை திருப்பதியில் தான் நடத்த வேண்டும் என்று இந்த ஜோடி விரும்பியது.
ஆனால், அது முடியாமல் போக, தற்போது திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்றுள்ளனர்.