தொழில் அதிபர் தம்மிக்க தமது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டும்

தொழில் அதிபர் தம்மிக்க

தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருக்கான மனுவை, அவர், தமது சொத்துக்களை பிரகடனம் செய்யும் வரையில் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சூதாட்ட விடுதிகளின் சொந்தக்காரர்
இலங்கையின் மிகப் பெரிய பணக்காரர் என்று சிலரால் நம்பப்படும் தம்மிக்க பெரேராவின் முதலீடுகளில் சூதாட்ட விடுதிகள், வங்கிகள், விருந்தகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமனம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பித்த பின்னரே அவர்களது நாடாளுமன்ற இடங்களைப் பெற்றனர் என்பதை மனித உரிமைகள் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், சுட்டிக்காட்டியுள்ளார்.