திருமணத்திற்கு பின்னர் சர்ச்சையில் மாட்டிக் கொண்ட நயன் விக்கி

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்
நேற்று காலை நடிகை நயன்தாராவிற்கு, விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், அஜித், மணிரத்னம், சூர்யா, கார்த்தி ஜோதிகா என பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

திருமணம் முடித்த கையோடு இன்று நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமலை திருப்பதி ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காலையில் இருந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனியார் புகைப்பட நிறுவனத்தின்

கோவிலில் சர்ச்சை
சாமி தரிசனம் முடித்துவிட்டு கோவிலில் இருந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரையும், தனியார் புகைப்பட நிறுவனம் போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், நயன்தாரா திருப்பதி தேவஸ்தானத்திற்குள் செருப்புடன் இருந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதனால், நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி கூறியுள்ளாராம். இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.