சூர்யா 41
சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் சூர்யா 41.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது. இதில் சூர்யாவிற்கும், பாலாவிற்கு மோதல் ஏற்பட்டது என்றும் தகவல் வெளியானது.
ஆனால், அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் இணைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது.
இப்படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் அதில் ஒரு வேடத்தில் காது கேட்காத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தலைப்பு அப்டேட்
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் தலைப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.