பசில் பதவி விலகியமைக்கான காரணம் இதுவே

நீண்ட கால திட்டம்
ராஜபக்ச குடும்பத்தினருக்கு தற்போது, அரசியல் பின்னடைவு ஏற்பட்டுள்ளபோதிலும், அவர்களின் நீண்ட கால பயணத்திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகியதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், கட்சியில் இருந்து விலகிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியும், ஜேவிபியும்
இவ்வாறு விலகிச்செல்பவர்கள், ஐக்கிய தேசியக்கட்சியில் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதேநேரம் இதில் இளைஞர்கள் மற்றும் யுவதிகள், ஜேவிபியுடன் இணைந்து வருகின்றனர்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைபவர்களின் எண்ணிக்கை குறைவு என்று கூறப்படுகிறது.

பசிலின் பொறுப்பு
எனவே பொதுஜன முன்னணியை காப்பாற்றி ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கவேண்டிய பொறுப்பும் பசிலுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுவும் அவர் பதவி விலகியமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.