நாட்டில் தற்போது அதிகரித்து வரும் நெருக்கடி நிலை காரணமாக இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தற்காலிகமாக அல்லாது, குறைந்தது நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எதிர்காலம் நிச்சயமற்றது
இவ்வாறான காலங்களில் மதுபானம் மற்றும் புகையிலையிலிருந்து விடுபடுவதும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும் இன்றியமையாதது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க இது தொடர்பான விளக்கங்களை வழங்கியுள்ளார்.
எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக இருப்பதால், எதிர்காலத்தை எதிர்கொள்ள குடும்பமாகவோ அல்லது தனிநபராகவோ சேமிப்பைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.