கொழும்பில் மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை வெளிநாட்டவர் ஒருவர் வழங்குவதை அவதானிக்க முடிந்துள்ளது.
குறித்த வெளிநாட்டவர் இன்று உணவு பொட்டலங்களைக் கொண்டுவந்து வீதியோரத்தால் சென்றவர்களுக்குக் கொடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பெருமளவு மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.
மக்கள் எரிவாயு, எரிபொருள், என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கவேண்டியுள்ளது.
எரிவாயு இன்மையால் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் அன்றாட உணவைப் பெற்றுக்கொள்ளப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களால் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.