உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்.