2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு திருத்த பணி இன்று(15) ஆரம்பமாகின்றது.
வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்களை தேசிய தேர்தல் ஆணையம் இன்று (15) முதல் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியலின் திருத்தங்களை ஜூலை 12 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பதிவேடு திருத்தம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
பதிவேடு சான்றிதழ்
அதேவேளை, அக்டோபர் 31ஆம் திகதி வாக்காளர் பதிவேடு சான்றிதழ் வழங்கும் பணி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.