இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன் (Joe Biden) , மேற்கண்டவாறு கூறியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பது மகிழ்ச்சியளைபதாக பிரதமர் ரணில் கூறினார்.
இதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (Joe Biden) தனது நன்றியையும் இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.