சந்திரமுகி 2
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இதன்பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.
இதில் ராகவா லாரன்ஸ் கதையானகனாக நடிக்கிறார் என்று பல தகவல்கள் வெளிவந்தது. இதை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.
வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப்போகிறார்? இல்லை ஜோதிகா மீண்டும் கதாநாயகியாக நடிப்பாரா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.
கதாநாயகி யார்
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கன்னா அல்லது ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.