இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்குமாறு நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், விடைத்தாள்களை வெற்றிகரமாக மதிப்பீடு செய்வதற்கும் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதியும் மதிப்பீட்டு கடமைகளில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.