45 ஆண்டுகளா உணவு சாப்பிடாமல் உயிருடன் வாழும் நபர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிஅருகே கட்டையாண்டிபட்டியை சேர்ந்தவர் நல்லு (வயது 80).
இவரது மனைவி அழகி. இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
இதில் சின்னகருப்பி என்ற மகள் இறந்து விட்டார். நல்லு சுமார் 50 ஆண்டு காலமாக வேகுப்பட்டியில் உள்ள ஒரு நகரத்தாரின் இல்லத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார்.
நல்லு கடவுள் மீது அதீத பக்தி கொண்டதனால் சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக உணவே உட்கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
வெளியில் எங்கு சென்றாலும் சாப்பிடாமல் பால், டீ, குளுக்கோஸ், சத்துமாத்திரைகள் உள்ளிட்டவைகளை மட்டுமே உணவு ஆதாரமாக பயன்படுத்தி உணவின்றி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
குடும்பத்தார்கள் உறவினர்கள் பலமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து பார்த்துள்ளனர்.
அங்கு இவருக்கு உடம்பில் எந்த கோளாறும் இல்லை என்றும் இவர் உணவு உட்கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனார்.
பக்தியின் உச்சத்தால் எடுத்த முடிவு
ஆனால் கடவுள் மீது அதீத பக்தி கொண்ட நல்லு உணவே உட்கொள்ள வேண்டாம் என்ற கோட்பாட்டுடன் 45 ஆண்டு காலமாக உணவில்லாமல் வாழ்ந்து வருகிறார்.
குடிநீர், உணவு எதுவும் உட்கொள்ளாமல் வீட்டில் மகன், மகள்கள் வாங்கி வரும் சத்து மாத்திரைகள், குளுக்கோஸ் மட்டுமே பயன்படுத்தி காலம் தள்ளி வருகிறார்.
உணவில்லாமல் ஒருவர் 45 ஆண்டுகளாக வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.