சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள்

நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் தான் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை அனைத்தும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானே ஆயுள்காரகன் ஆவார்.

அவரின் ஆதிக்கத்தை பொறுத்தே ஒருவரின் ஆயுட்காலம் நிர்ணயமாகிறது. சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்க்கு அதிபதியாவார். எனவே சனிக்கு அதிபதியான பெருமாளை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும். அதிலும் ஆயுள் பலன் அதிகரிக்க சனி விரதம் ஒன்றே மிகவும் உகந்ததாகும்.

கும்பம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருப்பவர் சனி பகவான். எனவே இவர்கள் நிச்சயமாக சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்தால் நல்ல பலன் கிடைத்து, வாழ்க்கை இனிமையாக இருக்கும். ரிஷபம், கன்னி, துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் லக்னத்திற்கு யோகாதிபதியாக சனி பகவான் இருக்கிறார். எனவே இவர்களும் சனி கிழமை விரதத்தை தொடர்ந்து கடை பிடித்து வந்தால் இவர்களுக்கும் நல்ல பலன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.

மற்றும் மற்ற ராசிக்காரர்களும் சனி கிழமை விரதத்தை கடைப்பிடித்து வர அவர்களிடமிருந்து துன்பம் தரக் கூடிய தீயபலன்கள் விலகி, நல்ல பலன்கள் கிடைக்க பெறுகின்றனர். இவ்வாறு முறையாக சனிக்கிழமை விரதத்தை பின்பற்றி வரும் அனைவருக்கும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் ஆகிய முப்பலன்கள் நிச்சயம் கிடைக்கிறது.