இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர்.
ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் இப்படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் ‘விக்ரம்’ படக்குழு கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.
இது குறித்து ரவிக்குமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், “நான் வியந்து பார்த்த ஆளுமை. அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்.
அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்து வைத்ததும், டைம் டிராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம். நன்றி லோகேஷ்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நான் வியந்து பார்த்த ஆளுமை அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்🥰 @ikamalhaasan
நன்றி @Dir_Lokesh pic.twitter.com/6cVLXDWwVc— Ravikumar R (@Ravikumar_Dir) June 18, 2022