எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் அவர் இவ்வாறு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான டொலர்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை வந்தடையவுள்ள கப்பல்கள்
எவ்வாறெனினும், பெட்ரோல் கப்பலொன்று 23ம் திகதியும், டீசல் கப்பலொன்று எதிர்வரும் 24ம் திகதியும் நாட்டை வந்தடைய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது இதனை குறிப்பிட்டுள்ளார்.