நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஓட்டமாவடி பிரதேசத்தையும் தாண்டி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் நேற்று பெற்றோல் விநியோகிக்கப்படும் எனும் தகவலை அறிந்து கொண்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் வரிசையில் காத்து நிற்கின்றனர்.
இந்த வரியானது பெற்றோலுக்காக காத்து நிற்கும் இந்த வரிசை வாழைச்சேனையிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் தாண்டி ஓட்டமாவடி வரை நீண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.