இலங்கை வரும் அவுஸ்திரேலிய புதிய அரசாங்க பிரதிநிதி

அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் இலங்கைக்கு விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்புகிறது. அந்தநாட்டில் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் தெரிவானதன் பின்னர், இலங்கையில் இருந்து பல படகுகளில் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.

எனினும் அவர்கள் அனைவரும் எல்லையில் தடுக்கப்பட்டு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் நாடுகடத்தப்படுகின்றனர்.

இந்தநிலையில் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கின்ற அனைவரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் எபதை தெரிவிக்கும் வகையில் , அவுஸ்திரேலியா தமது உள்துறை அமைச்சர் க்ளெயார் ஓநீலை ( Clare O’Neill) இலங்கைக்கு அனுப்புகிறது.

இன்று இலங்கை வருகின்ற அவர் ( Clare O’Neill), ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார் என கூறப்படுகின்றது.

அத்துடன் இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவுஸ்திரேலியாவால் எவ்வாறு உதவ முடியும் மற்றும் அகதி படகுகளை தடுப்பதற்கான வழிகள் குறித்து அவதானம் செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து நாட்டில் இருந்து அதிக அளவான அகதி படகுகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது