இதுவரை உலகம் முழுவதிலும் விக்ரம் வசூல் நிலவரம்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பற்றிய பேச்சு தான் கடந்த சில வாரங்களாகவே உள்ளது.

காரணம் படத்தின் கதை, நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல்ஹாசன் படம், விஜய் சேதுபதி-ஃபகத் பாசில் போன்ற நடிகர்கள் படத்தில் இருப்பது என நிறைய ஸ்பெஷல் விஷயம்.

முக்கியமாக கதை தரமாக இருக்கவே தான் ரசிகர்கள் படத்திற்கு பேராதரவு கொடுக்கிறார்கள்.

படம் வெளியாகி 3 வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது, வசூலில் மட்டும் எந்த குறையுமே இல்லை.

உலகம் முழுவதும் வசூல்

தமிழகம், கேரளா, ஆந்திரா, வட மாநிலம் என எல்லா இடங்களிலும் படத்திற்கு அமோக வரவேற்பு தான். 3 வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 365 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இந்த வாரத்திலும் படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அடுத்தது வாரத்தில் இருந்து குறைய வாய்ப்பு இருக்கிறது. காரணம் சில நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸிற்கு தயாராகி இருக்கிறது.