சிவகார்த்திகேயன் பட அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகியுள்ள திரைப்படம் ப்ரின்ஸ்.

தமிழ் மற்றும் தெலுங்கு வெளியாகவுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டை சேர்ந்த மாரியா என்ற நடிகை ஜோடியாக நடித்திருக்கிறார்.

மேலும் தற்போது இப்படத்தின் இயக்குநர் அனுதீப் KV, சிவகார்த்திகேயன், சத்யராஜ், மாரியா உள்ளிட்டோருடன் ப்ரின்ஸ் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

அதன்படி ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். முதல் முறையாக தீபாவளியில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படத்துடன் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.