நாட்டில் பிரச்சினை ஒன்று இருப்பதன் காரணமாகவே தான் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும் தற்போது பிரச்சினைக்கு தீர்வு காண்பதே தனது பொறுப்பு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்த பின்னர், நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சவாலில் வெற்றி பெற முடியும்
இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு வெற்றி பெற முடியும் என நம்புகிறேன். சிறந்த அமைச்சு பதவி ஒன்று எனக்கு கிடைக்கும் என நினைக்கின்றேன்.
எந்த அமைச்சு பதவியை வழங்கினாலும் பொறுப்பை ஏற்று கடமையை செய்வேன்.பொறுப்புக்களை நிறைவேற்றி சவாலில் வெற்றி பெற முடியும் என்பதால் நான் வந்துள்ளோம்.
நான் மூழ்க்கிக்கொண்டிருக்கும் கப்பலில் ஏறவில்லை. வேகமாக ஓடும் கப்பலில் ஏறியுள்ளேன். என்னால், அந்த வேகத்தை நிறுத்த முடியும் என எண்ணுகிறென்.
போர் நடைபெற்ற காலத்தில் நான் முதலீட்டுச் சபையின் தலைவராக பணியாற்றிய அனுபவத்திற்கு அமைய தற்போது நாட்டுக்கு தேவையான முதலீடுகளை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்