சாப்பிட்டதும் சிலருக்கு ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். சாப்பிடுவதற்கு முன்பு வரை பார்த்து வந்த வேலையிலும் மந்தம் ஏற்படக்கூடும். சோர்வுக்கும், சாப்பிடும் உணவுக்கும் தொடர்பு இருக்கிறது.
சோர்வுக்கான காரணத்தை வெளிப்படையாக கண்டறிய முடியாவிட்டால், சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதும் காரணமாகும். சில வகை உணவு பழக்கங்கள் சோர்வை வரவழைக்கும் தன்மை கொண்டவை. அவற்றை ஒதுக்கி சத்தான உணவுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் சோர்வை விரட்டிவிடலாம்.
மறுசுழற்சி செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உள்ளடக்கிய பிரெட், பாஸ்தா போன்றவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யக்கூடியவை. அதன் தாக்கமாக உடலில் இன்சுலின் அளவு குறைவாக இருக்கும். அது சோர்வு அல்லது பலவீனத்தை ஏற்படுத்தக்கூடும்.
காபின் உள்ளடங்கிய டீ, காபி போன்ற பானங்களை தவிர்ப்பது நல்லது. இந்த பானங்கள் தற்காலிகமாக உடலில் ஆற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடியவை. காபின் அதிகமாக உட்கொள்வது, சோர்வு பின் தொடர்வதற்கு முக்கிய காரணமாக அமையும். பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை நிறைந்த உணவு பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். சிலவற்றில் இல்லாமலும் போகலாம்.
ஆனால் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும். அது உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்வதைவிட குறைக்கவே செய்யும். மனித உடலின் 60 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இருக்கும் இரத்தம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை செல்களுக்கு கொண்டு செல்லவும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
அதனால் போதுமான அளவு நீர் பருகி நாள் முழுவதும் உடலில் நீர்ச்சத்து சீரான அளவு இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதன் மூலம் சோர்வையும் விரட்டிவிடலாம். சோர்வை விரட்டி உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதில் சியா விதைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
அதில் தாதுக்கள், புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் மதிப்பை மாற்றமுடியாது.
எனினும் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவை என்பதை கண்டறிந்து அதற்கேற்ப உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சோர்வையும் நெருங்கவிடாது.