விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற சீரியல் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீநிதி. அதன்பிறகு பகல் நிலவு, வல்லி, யாரடி நீ மோகினி என தொடர்ந்து தொடர்கள் நடித்து வந்தார்.
இடையில் அவர் கமிட்டான சில தொடர்களில் இருந்து திடீரென விலகி வர ரசிகர்களும் ஏன் அவருக்கு என்ன ஆனது புதிய சீரியல்களில் இருந்து ஏன் விலகுகிறார் என ரசிகர்களே புலம்பு வந்தார்கள்.
மோசமான உடல்நிலை
சீரியல் நாயகியான இவரது இன்ஸ்டா பக்கத்தை பலரும் பாலோ செய்து வருகிறார்கள்.
ஆனால் இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஏதாவது ஒரு விஷயத்தை கூறி பலருக்கும் பிரச்சனைகளை கிளப்பி வந்தார்.
தற்போது அவரை புழல் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். திடீரென ஸ்ரீநிதி மருத்துவமனையில் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளார், மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது.