தேவையான பொருட்கள் :
சிக்கன் கைமா – கால் கிலோ,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
போண்டா மாவு – 250 கிராம்,
சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை – 50 கிராம்,
இஞ்சி – 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
* சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். * எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும். * அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். * கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். * முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். * போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும். * அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். * சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.