சமீபத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்தான். 20 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை தனியார் ஓடிடி நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கியது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை வேத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்த வேத விற்பன்னர்களுக்கு மட்டும் பெரிய தொகைக் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. இந்த ஒரு செலவை மட்டும் நயன்தாரா கொடுத்திருக்கிறார். மற்றவையெல்லாம் தனியார் ஓடிடி நிறுவனம் செய்திருக்கிறது. இதே போல இவர்களது தேனிலவு பயணத்தையும் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது. தாய்லாந்தில் பிரபலமான த சியாம் ஓட்டலில் ஏற்பாடு செய்திருக்கிறது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இந்த ஓட்டல் நிறுவனமும் இந்த நட்சத்திர ஜோடிகளை தங்களின் சிறப்பு விருந்தினர்களாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தேனிலவு முடிந்து திரும்பியிருக்கும் இருவரும் ஓட்டல் நிர்வாகத்திற்கும், பயண ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.