ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே ஐகூவின் 10 ப்ரோ மாடலின் விவரங்கள் லீக்கான நிலையில், தற்போது ஐகூ 10 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்துள்ளன.
அதன்படி 6.78-இன்ச் OLED பேனல், 120Hz புதுப்பிப்பு வீதம், முழு-ஹெச்டி பிளஸ் ரெசொலியூசன் மற்றும் DC டிம்மிங் ஆதரவு உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐகூ 10 ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இதில் 1/1.5-இன்ச் அளவுள்ள 50MP பின்புற கேமரா உடன் வரும் என இந்த போன் குறித்த விவரங்கள் ஏற்கனவே லீக் ஆகியது.
இந்நிலையில், ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனில் டைமென்சிட்டி 9000+ பிராசஸரை இணைத்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் டைமென்சிட்டி 9000+ பிராசஸருடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக ஐகூ 10 சீரிஸ் இருக்கும் என கூறப்படுகிறது.
இதைத் தவிர இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பிற அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஐகூ 10 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதன் வெளியீட்டுத் தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.