கனேடிய அரசாங்கம் சுமார் 100 நாடுகளிலிருந்து நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.
கனடாவின் உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த புதிய நடைமுறைக்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
விசர் நாய்க் கடியினால் ஏற்படக்கூடிய ரெபிஸ் நோய் பரவுகை ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ரெபீஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நாய்கள் தொடர்பில் தற்போதைக்கு தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை.
எவ்வாறெனினும், கடந்த 2021ம் ஆண்டில் தொற்று நோயுடன் கூடிய நாய்கள் கனடாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றுக்கு இலக்கான ஓரு நாயின் மூலம் மனிதர்கள், செல்லப் பிராணிகள் மற்றும் வனவிலங்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.