எரிபொருளிற்கு இன்னும் பத்து நாட்களில் தீர்வு ஜனாதிபதி

இலங்கையில் சில மாதங்களாக நிலவும் கடுமையான எரிபொருள் பிரச்சினைக்கு அடுத்த 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று சனிக்கிழமை (02-07-2022) மாலை ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது நாட்டில் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கும் எரிபொருள், எரிவாயு உட்பட சமகால பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதன் போதே எரிபொருள் பிரச்சனைக்கு இன்னும் 10 நாட்களில் தீர்வு பெற்றுதருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார்.

இவ் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் 10 நாட்களுக்கு பொறுமையாக, இருப்பதாக கூறியுள்ளனர்.