நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தைகளில் சைக்கிள்களின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் , சைக்கிள் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் சைக்கிள்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதால், இருப்பு தீர்ந்துவிட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
அதேசமயம் இலங்கையில் தற்போது சாதாரண சைக்கிள் விலை 60,000 ஆகவும், கியர் பைக்கின் விலை 77,000 ஆகவும் உயர்ந்துள்ளது.